ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ 54, 000 பறிமுதல்

58பார்த்தது
ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ 54, 000 பறிமுதல்
தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே மேலநத்தம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். இதில் கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து திரும்ப கோட்டை நோக்கி சென்ற மினி லாரியை மறைத்து சோதனை செய்ததில் அதன் ஓட்டுனர் பாலமுருகன் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 54 ஆயிரத்து 150 ரூபாயை போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளர் ஸ்ரீராமிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி