காசிமேட்டில் மீன் வரத்து குறைவு மீன் விலை உயர்வு

2261பார்த்தது
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால் இதனால் மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் மீன் வாங்க வந்ததால் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் தொடர்ந்து முந்தையவரங்களில் மீன்களின் விலை குறைவாக காணப்பட்ட நிலையில் இந்த வாரம் பெரிய வகை மீன்களில் வறுத்து குறைவாக காணப்பட்டது இதனால் வஞ்சிரம் கிலோ ஒன்றுக்கு 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போன்று பெரிய வகை மீன்களான வஞ்சிரம் பாறை சங்கரா சீலா தோள்பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து குறைவாக காணப்படுகிறது இந்த வாரம் ஏராளமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிகாலை முதலே கரை திரும்பினார். அதேபோன்று மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் மீன் பிரியர்களும் அதிகாலை முதலே கூடினர். தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர் மொத்த விலையில் வாங்கி செல்ல வந்திருந்த விற்பனையாளர்களின் கூட்டமும் அதிகமாகவே காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி