மதுரவாயல் நூம்பல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கூரியர் நிறுவனம் மற்றும் அதன் அருகிலேயே குடோன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் அலுவலகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மள, மளவென பரவிய நிலையில் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.