மத்திய அரசை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் சி. பெருமாள் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்த வேண்டும், எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி தொகைக்கு ரூபாய் 192 கோடி நிதி ஒதுக்கீடு வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4000 வாங்கிட வேண்டும்.

தேசிய கரும்பு மேம்பாட்டு நிதியகத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்ற கடனில் தமிழக அரசு செலுத்திய ரூ. 9.5 கோடிப்போக ரூ. 16.32 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும், சர்க்கரை விற்பனையில் உள்ள கோட்டா முறையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கையில் கரும்புகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி