மகளீர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழா.

85பார்த்தது
சென்னை அருகே திருவேற்காடில் மகளீர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. நகரமன்ற தலைவர் என். ஈ. கே. மூர்த்தி தலைமையில் முன்னாள் அமைச்சர் சா. மு. நாசர் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்ட மகளீருக்கு 75 லட்சம் ரூபாய்க்கு காண கடன் உதவி ஆணையை வழங்கினார். அப்போது பேசிய சா. மு. நாசர் மகளிர் இலவச பேருந்து துவங்கி, மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். குஜராத்தில் பூகம்பம் வந்த போது தாயுள்ளத்துடன் கலைஞர் மோடிக்கு ஒரு விமானம், இரண்டு ரயில்கள் மூலம் தேவையான பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர். ஆனால் நாம் மழை வெள்ளத்தில் தத்தளித போது கேட்ட நிதியை மோடி தரவில்லை. 900 கோடி தந்ததாக கூறுகிறார்கள் ஆனால் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் உரிமை தான் வழங்கப்பட்டது. இங்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிதி வழங்கவில்லை என்றார். மேலும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு 558 கோடி நிதி ஒதுக்கி உள்ள ஒன்றிய அரசு.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சிக்கு
வெறும் 53 கோடியே ஒதுக்கியுள்ளது.
ஒரு கண்ணில் பால் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் ஆட்சி தான் ஒன்றியத்தில் உள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி