திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறை அறிவிப்பு. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளிக் கல்லூரிகள் இயங்கும் என்று அறிவித்தார்.
மேலும் சில பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியிருப்பதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு இன்று விடுமுறை அளித்துள்ளார். மேலும் பள்ளி வழக்கம்போல் இருக்கும் என்று ஒரு சில மாணவிகள் பள்ளிக்கு வந்து விடுமுறை என்று தெரிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.