கணவர் மாயம் மனைவி புகார்.

1089பார்த்தது
கணவர் மாயம் மனைவி புகார்.
"பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது, ராமசமுத்திரம் கோணிக்காரகுப்பம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனிய்யா, 66.

இவர், கடந்த டிச. , 21ம் தேதி அதிகாலையில், மனைவி சுஜாதாவை வயல்வெளிக்கு அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில் தானும் வயல்வெளிக்கு வருவதாக சுஜாதாவிடம் கூறியுள்ளார்.

வயல்வெளிக்கு சென்ற சுஜாதா, நீண்ட நேரமாகியும் முனிய்யா வராததால், அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சுஜாதா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி