திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் பணியாளர் ரமேஷ் (47) என்பவர் மலைக் கோயிலில் விரைவு தரிசனம் வழியில் டிக்கெட் வழங்கும் பணியில் இருந்தார். அவ்வையியாக திருவண்ணாமலை கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் அபிஷேக் (19) என்பவர் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய விடுமாறு தகராறு செய்து தள்ளிவிட்டு பணி செய்யவிடாமல் தடுத்தது தள்ளிவிட்டு கோவில் பணியாளரை தாக்கி பிரச்சனை செய்ததாக கோயில் இணை ஆணையர் ரமணியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் திருவண்ணாமலை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தனர்.