திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

75பார்த்தது
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று கிருத்திகை மற்றும் வியாழக்கிழமை என்பதால் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடக என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். 100 ரூபாய் கட்டண வழியில் ஒரு மணி நேரமும் இலவச தரிசனம் வழியில்  சிறுவர்கள் பெண்கள் கடும் வெயிலும் பொருட்படுத்தாமல் தலையில் துணிகள் பொறுத்துக் கொண்டும் குடை பிடித்து படியும் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவரை தரிசனம் செய்த வருகின்றனர். பக்தர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருப்பதால் கடும் அவதி. மாட வீதியில் மேட் அமைத்து தற்காலிக நிழல் கூடை அமைக்க வேண்டும் என்று முருகன் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி