முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா.

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களின் வழிகாட்டுதலின் பேரில் பச்சைபயிறு, நெய், நிலக்கடலை, கொண்டை கடலை, பேரிச்சம் பழம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து அடங்கிய பொருட்களின் தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் ஆகியோர் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினர் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி