லாரி உதிரி பாக சேமிப்பு கிடங்கில் பயங்கர விபத்து

3646பார்த்தது
சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே அமைந்துள்ள முத்து மோட்டார்ஸ் லாரி உதிரிப்பாக சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சேமிப்பு கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அதன் அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் மணலி, மாதாவரம், செங்குன்றம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி