திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள சமுதாய நலகூடத்தில் புழல் மண்டலம் பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் புழல் மண்டல தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட பொது செயலாளர் நரேஷ்குமார் அகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து பின்னர் சிறப்புரையாற்றினர். இதணைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை அடையாள அட்டைகளை வழங்கினர்.
இந்த முகாமிற்கு கணேசன், முரளிசெட்டியார், நாகராஜ், ரஜினி, அகிலன், வாசுகி உள்ளிட்ட பாஜகவின் அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.