திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் அமைந்த சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கடல் நீரை குடிநீராக்கும் ஆலை கடந்த 2010 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது தொடர்ந்து உற்பத்தி திறன் குறைந்ததால் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குடிநீர் உற்பத்தி திறன் குறித்தும் இயந்திரங்கள் சேதமானது குறித்தும் பார்வையிட்டு 100 எம் எல் டி முழு இலக்கு உற்பத்தியை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்ற நிலையில் தற்போது வரை முறையாக சீரமைக்கப்படாததால் உற்பத்தி திறன் குறைந்து வருகிறது மேலும் இங்கு ஆலை ஆரம்பித்த காலத்தில் இருந்து பணியாற்றி வரும் 200கும் மேற்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு போனஸ் உள்ளிட்டவை வழங்காமல் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததால் மூன்று ஷிப்டுகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தொடர் போராட்ட அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர், எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் மணலி உள்ளிட்ட வடசென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 28 எம் எல் டி குடிநீர் வழங்கி வந்த நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக குடிநீர் வினியோகம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது