புழல்: ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த வாலிபர்

5800பார்த்தது
புழல்: ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த வாலிபர்
சென்னை, புழல் அடுத்த சைக்கிள் ஷாப் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இதில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சவுகான், 26, என்பவர், சுமை துாக்கும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 31ம் தேதி நள்ளிரவு, நிறுவனத்தின் வாசலில் நின்று, மொபைல்போனில் பேசியுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், இவருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி, மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், தன்னிடம் இருந்த கத்தியால் நிரஞ்சன் சவுகான் தலையில் வெட்டியுள்ளார். பின் மூவரும், அவரது மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். படுகாயமடைந்த நிரஞ்சன் சவுகானை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி