சோழவரம்: மின்கல வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ

60பார்த்தது
சோழவரத்தில் நெற்பயிர் டிஜிட்டல் முறை கள ஆய்வு பணி மற்றும் பேட்டரி மின்கல வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதி செய்யும் சமூக நலத் துறையினர் நிகழ்ச்சியில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய துணை தலைவர் கருணாகரன் தலைமையில் கிராமப்புறங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளில் குப்பைகளை சேகரிக்க ஏதுவாக தூய்மை பணியாளர்களுக்கு மின் கல பேட்டரி வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சுதர்சனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பின்னர் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள நெற்பயிர்களை டிஜிட்டல் முறையில் கள ஆய்வு செய்து பதிவேற்றம் செய்யும் பணிக்கு வேளாண் கல்லூரி மாணவ மாணவியர்கள் பணிகளை துவக்கி வைத்தார் பின்னர் சோழவரம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் விதமாக திடகாத்திரமான உடல் வலிமைக்கு ஊட்டச்சத்து அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கி குழந்தைகளின் ஒவ்வொரு தாய்மாருக்கும் தலா 200 ரூபாய் பணம் மற்றும் இனிப்பு ஆகியவற்றை எம். எல். ஏ சுதர்சனம் வழங்கினார் இத்திட்டத்தினை சமூக நலப் பாதுகாப்பு துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி