புழல் பிரதான சாலையில் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மரியாதை

559பார்த்தது
புழல் பிரதான சாலையில் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மரியாதை
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் பிரதான சாலையில் அமைந்துள்ள "அண்ணல் அம்பேத்கர்" அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திருஉருவ சிலைக்கு சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மரியாதை செலுத்தினார். "சமத்துவ நாள்" உறுதிமொழி சாதி வேறுபாடுகளை எதிர்க்கவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்துக்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் எதுவும் இல்லா சமத்துவத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதி பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் உடன் மிசா மதிவாணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி