கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்டது வெண்மனம்புதுார். இங்கு விடையூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே உள்ளது குட்டை. இந்த குட்டை நீரை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் போதிய பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால் புதர் மண்டி குப்பை கொட்டும் இடமாகி கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது.
அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும் குட்டையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈஸ்வரன் கோவில் குட்டையை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.