கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் உற்சவம் தொடக்கம்.

567பார்த்தது
*ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் உற்சவம் தொடக்கம்*

*சந்திரன் நிறம் போன்று முழுவதுமே வெள்ளை மாலை அணிந்து சீதா சுயம்வரம் வில்லை உடைக்கும். அலங்காரத்தில் ராமர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்*

*18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ராமர் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்*


சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு 9 நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது

முதல் நாளான இன்று சந்திர பிரபை வாகனத்தில் சீதா சுயம்வரம் அலங்காரத்தில் ராமர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

வருகின்ற 17ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நடைபெறும் ஒன்பது நாள் உற்சவத்தில்

தினமும் கோதண்டராமர் விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்

அம்ச வாகனம் நாக வாகனம் அனுமந்த வாகனம் கருட வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் என வாகனங்களில் மாலை நேரத்தில் நான்கு மாட விதிகளிலும் வலம் வருகிறார்

18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ராமர் உற்சவத்தில் முதல் நாளான இன்று சந்திரன் போன்ற வெள்ளை நிறத்தில் முழுவதுமாக வெள்ளை நிற மாலை அணிந்து சந்திரப் பிரபை வாகனத்தில்

நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த ராமபிரானை வழிநெடுகிலும் மக்கள் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர்