அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்; தீவிர வாகன சோதனையில் போலீசார்

3694பார்த்தது
தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதிநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல்தேதியை அறிவித்தது மட்டுமல்லாமல் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

அதில் குறிப்பிடதகும் படியாக பணம், பொருட்கள் மற்றும் மது விநியோகம் செய்யப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் இரவு நேரங்களில் வங்கி வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லக்கூடாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முழுவதுமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து பணபரிவர்த்தனைகளை தடைசெய்ய தீவிர கண்காணிப்புகளுடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக வடசென்னை ஆர்கே நகர் பகுதியில் அதிகாலை முதலில் இருந்தே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்கூட்டர் டைப் இரு சக்கர வாகனங்கள் கார்கள் என பணம் கொண்டு செல்ல ஏதுவாக கருதப்படும் இவ்வகையான வாகனங்களை மடக்கு தகுந்த ஆவணங்கள் உள்ளதா பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்த சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி