மாஞ்சோலை விவகாரம்.. மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை

64பார்த்தது
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த 3 மாதங்களாக வேலையிழந்து தவித்து வருகின்றனர. இந்நிலையில் மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திருபாதி ஆகியோர் இன்று(செப்.18) நெல்லை வந்தனர். பிறகு இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமியிடம் நேரில் விசாரணை நடத்தி அவரிடம் உள்ள ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி