நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மகாராஜ நகர் ஜெயந்திபுரத்தில் செல்லும் கழிவு நீர் ஓடையின் வழித்தடத்தை மாநகராட்சியினர் திடீரென மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. எனவே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மக்களினம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.