திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் இன்று (நவம்பர் 8) பாளையங்கோட்டை சாரல் டக்கர் பெண்கள் பள்ளியில் மாணவியர்களுக்கு சமூக வலைதளங்களில் உள்ள ஷாப்பிங் நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவது குறித்தும், ATM கார்டு மற்றும் OTP குறித்தும், சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.