நெல்லை மாநகராட்சி பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் ஊதியம் முழுமையாக வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே மாநகராட்சி மெத்தன போக்கை கண்டித்து பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊதியம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.