தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நெல்லையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் விடியல் சேகர் அளித்த பேட்டியில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விலைவாசி உயர்ந்துள்ளது. மக்கள் மீது தொடர்ந்து திமுக அரசு சுமையை ஏற்றி வருகிறது. தமிழக வெற்றி கழகம், காமராஜர் பாதையில் நல்ல கொள்கைகளை முன்னிறுத்தி அரசியலுக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.