திருநெல்வேலி மாவட்டத்திற்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்கடல் என்பது கடல் சீற்றம் எதுவும் இன்றி திடீரென அதிக உயரத்தில் அலைகள் எழும் நிகழ்வு என கருதப்படுகின்றது. இந்த கள்ளக்கடல் எச்சரிக்கையை இந்திய கடல்சார் தகவல் மையம் இன்று (ஜூன் 10) விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலோர மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கடலோர பகுதிகளுக்குச் செல்வோர் மற்றும் அங்கு வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.