பிச்சைக்காரரை கொன்ற இருவர் கைது

69பார்த்தது
பிச்சைக்காரரை கொன்ற இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியை சேர்ந்தவர்கள் சௌந்தர் மற்றும் ராஜா. இவர்கள் இருவரும் நேற்று (ஏப். 14) இரவு நெல்லை நீதிமன்றம் எதிரே நின்று கொண்டிருந்தபொழுது 45 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர் ஒருவர் இருவரிடமும் பீடி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பிச்சைக்காரரை அடித்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இருவரையும் மாநகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி