திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் சங்கம் நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள் கூறுகையில் எங்களது சங்கத்தின் தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட மரியராஜ் என்பவர் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து இதுவரை முன்னாள் செயல்பட்ட நிர்வாகம் உரிய கணக்குகள் ஒப்படைக்கவில்லை என குற்றம் சாட்டினர்.