கார்த்திகை மாதம் தொடங்குவதால் ஐயப்பன் சுவாமிக்கு பக்தர்கள் மாலை அணிந்து தங்களின் விரதத்தை தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று முதல் பக்தர்கள் தமிழக முழுவதும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை செல்ல தொடங்குவார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு நேற்று இரவு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.