திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருவியாக அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். ஆனால் இந்த அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டண வசூலை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதாக வனத்துறை மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.