திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி செல்வகுமாரி. கடந்த எட்டாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வகுமாரி பின்னர் வீடு திரும்பவில்லை. மாரியப்பன் பல இடங்களில் தேடியும் செல்வகுமாரி கிடைக்காததால் அவர் நேற்று சேரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சேரன்மகாதேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான செல்வகுமாரியை தேடி வருகின்றனர்