தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சண்முக நதி அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52. 5 அடியாகும். இன்று இந்த அணை முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பி வழிகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் அணை நிரம்பி மறுகால் பாய்வது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது