தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி 10வது வார்டு பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள வீடுகள் மற்றும் கடைகள் கழிப்பிடகட்டிடம் போன்றவைகளை அகற்றுவதற்கு இன்று தாசில்தார் கண்ணன் தலைமையில் பேரூராட்சி அதிகாரிகள் காவல் துறையினருடன் வந்தனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.