சபாநாயகரான பெண் எம்‌.எல். ஏ.,

85பார்த்தது
சபாநாயகரான பெண் எம்‌.எல். ஏ.,
மிசோரம் சட்டசபை வரலாற்றில் ஒரு வரலாற்று தருணம் நடந்துள்ளது. முதல்முறையாக பெண் ஒருவர், அதுவும் இளம்பெண் வன்னேஹாசங்கி (33) சட்டப் பேரவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிசோரம் சட்டசபைக்கு இது ஒரு முக்கியமான வரலாற்று மைல்கல் என்று அம்மாநில முதல்வரும், ஜோரெம் மக்கள் இயக்கத்தின் மூத்த தலைவருமான லால்துஹோமா கூறினார். அவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஐஸ்வால் தெற்கு 3 தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத்தின் இளைய எம்எல்ஏ என்ற வரலாறு படைத்தார்.

தொடர்புடைய செய்தி