லிப்ஸ்டிக் விவகாரத்தில் மேயரின் தபேதார் மாற்றப்படவில்லை

62பார்த்தது
லிப்ஸ்டிக் விவகாரத்தில் மேயரின் தபேதார் மாற்றப்படவில்லை
சென்னை மேயர் ப்ரியாவின் தபேதாராக இருந்தவர் மாதவி. மேயர் செல்லும் இடங்களில் இவரை பார்க்கலாம். இவர் மணலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். உதட்டில் லிப்ஸ்டிக் போடாதே என சொன்னதை நான் மீறியது குற்றமா என மாதவி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து மேயர் அலுலவகம் அளித்த விளக்கத்தில், ”லிப்ஸ்டிக் விவகாரத்தால் தபேதாரை மாற்றவில்லை. சரிவர பணி செய்யாததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி