புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித், அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் நேற்று (ஜூலை 28) மாலை சிகிச்சைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.