வாங்கிய விருதை ஏலத்தில் விட்ட பிரபல நடிகர்.. காரணம் இதுதான்

64பார்த்தது
வாங்கிய விருதை ஏலத்தில் விட்ட பிரபல நடிகர்.. காரணம் இதுதான்
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் விஜய தேவரகொண்டா. இவர், அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவரின் புதிய படமான 'பேமிலி ஸ்டார்' ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விஜய தேவரகொண்டா, சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக கூறியிருந்தார். மேலும், அந்த விருதை ஏலம் விட்டதில் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி