மேற்கத்திய கலாச்சாரத்தில் துரதிர்ஷ்டவசமான நாட்களில் ஒன்றாகக் 13 ஆம் தேதியில் வரும் வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இதெல்லாம் மூடநம்பிக்கை என நிரூபிக்க அதே நாளில் கல்லறையில் வைத்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மேத்யூ - ஹன்னா ஜோடி கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டனர். அவர்கள் தற்போது கூறும் போது, “எங்களுக்கு எந்த துரதிஷ்டமும் ஏற்படவில்லை, அண்மையில் புதிய வீடு வாங்கி மகிழ்ச்சியாக உள்ளோம்.” என்றனர்.