மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர்

52பார்த்தது
மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர்
திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இந்நிலையில் இன்று திருப்பத்தூறில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து செல்ல திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் அவர்களை கீழே இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெண்ணிலா கையில் பெட்ரோல் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறியபின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி