கும்பகோணம்: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

85பார்த்தது
கும்பகோணம்: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோடையான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரைச் சேர்ந்த அருண் (எ) கீர்த்திவாசன் (21) என்பவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் அண்மையில் (அக். 25) கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி ஜி. கீர்த்திவாசன் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், குற்றவாளி கீர்த்திவாசனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார். 

ஏற்கெனவே கீர்த்திவாசன் சிறையில் இருப்பதால் சிறை அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை குண்டர் காவல் தடுப்புச் சட்ட உத்தரவு வழங்கப்பட்டது. அதன்பேரில் அருண் (எ) கீர்த்திவாசன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி