விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். அதில், 2 ஆயிரத்து 481 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய இயற்கை வேளாண் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். இதில் ஆயிரத்து 584 கோடி ரூபாயை மத்திய அரசும், எஞ்சிய 897 கோடி ரூபாயை மாநில அரசும் விகிதாசார அடிப்படையில் விநியோகிக்கும் எனக் கூறினார்.