நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு ஆடுதுறையில் வரவேற்பு

73பார்த்தது
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு ஆடுதுறையில் வரவேற்பு


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாதயாத்திரையாக திருவிடைமருதூர் தாலுக்கஅ ஆடுதுறை வந்த பக்தர்களுக்கு விடிய விடிய சூடான இட்லி வழங்கு வகையில் வீரசோழன் கோசிமணி திருமணம் மண்டபம் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் வகையில் ஜூஸ் மற்றும் உணவுகள் வழங்கும் சேவைப் பணி நிகழ்ச்சியை ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆடுதுறை - திருமங்கலக்குடி திருவண்ணாமலை அருணாச்சல பவுர்ணமி கிரிவலம் குழு சிவக்குமார், சந்தானம், மகாலிங்கம், திருமூலர் சந்திரசேகரன்,
சேகர், பேரூராட்சி கவுன்சிலர் பாலதண்டாயுதம், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.