திருபுவனம் பள்ளிவாசல் முன்பு அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

71பார்த்தது
திருபுவனம் பள்ளிவாசல் முன்பு அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு


தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல் முன்பு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவு கேட்டு, தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில், திருபுவனம் நகர செயலாளர் சிங் செல்வராஜ், கூட்டணி கட்சியான SDPI நகரத் தலைவர் ஹாஜி, தேமுதிக நகர பொறுப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் அதிமுகவிற்கு தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சின்ன பள்ளிவாசலில் பள்ளிவாசல் ஜமாத்தார்களிடம் திருபுவனம் நகர செயலாளர் சிங் செல்வராஜ் அதிமுக சார்பில் போட்டியிடும் பாபுவிற்கு ஆதரவு கேட்டு அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரித்தார். இதில் ஏராளமான கழகத் தொண்டர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி