மணல் கடத்தலில் ஈடுபட்டமூவர் கைது

66பார்த்தது
மணல் கடத்தலில் ஈடுபட்டமூவர் கைது
கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மையப்பன், எளங்குடி, ஓடம்போக்கி ஆற்றில் சாக்குமூட்டைகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட - அம்மையப்பன், எளங்குடி, மேலத்தெருவை சேர்ந்த முருகையன் மகன் பாஸ்கரன் (வயது-55), ஊர்குடி, மரத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சூர்யா (வயது-24) ஆகியோரை பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானந்தாங்குடி, சுடுகாடு அருகில் மணல் திருட்டில் ஈடுபட்ட - மானந்தாங்குடி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பிரபாகரன் (வயது-48) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அரசு அனுமதியின்றி மணல் திருட பயன்படுத்திய 2-இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறப்பாக செயல்பட்டு மணல் இளங்கோவன், பேரளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்கள்.

அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார்,, அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி