தஞ்சாவூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு
முதன்முறையாக தஞ்சாவூரில் மக்களவை தொகுதி உறுப்பினர் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் முதன்முதலாக மக்களவை உறுப்பினர் அலுவலகம் ராமநாதன் ரவுண்டானா பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அமைக்கப் பட்டுள்ளது. இந்த அலுவலகம், அதனுடன் கூடிய நூலகத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்து மக்களவை உறுப்பினர் ச. முரசொலிக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வெற்றிபெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு உதயநிதி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யா மொழி (பள்ளிக் கல்வித் துறை), டி. ஆர். பி. ராஜா (தொழில் துறை), கோவி. செழியன் (உயர்- கல்வித் துறை), முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.