குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூகப்பணியாளர் பணியிடம்

58பார்த்தது
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூகப்பணியாளர் பணியிடம்
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்பு
துறையின் கீழ் மிஷன் வாட்சால்யா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகின்றது.  

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.  


இப்பதவிகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகள் https: //thanjavur. nic. in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ. உ. சி, நகர், தஞ்சாவூர் 613007 (தொலைபேசி எண் 04362 237014) என்ற முகவரிக்கு 04. 03. 2024 தேதி மாலை 5. 30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி