பாலியல் புகார்: மருத்துவ பேராசிரியர் இடமாற்றம்

83பார்த்தது
பாலியல் புகார்: மருத்துவ பேராசிரியர் இடமாற்றம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவப் பேராசிரியர் நாகைக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக கல்லூரியிலுள்ள விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.  


இந்த விசாரணைக் குழுவினர் மருத்துவ மாணவ, மாணவிகள், பயிற்சி மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணையை நடத்தியது.

இந்த விசாரணைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவப் பேராசிரியர் ஒருவர் நாகை மாவட்டத்துக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், 2 பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை எம். ஜி. ஆர். பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவும் மருத்துவக்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி