தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற அலுவல் நிலைப் பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவல் நிலைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் தடையின்றி முறையாக வழங்க வேண்டும். இதற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மாதத்தின் கடைசி பணி நாளில் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பெ. சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். இதில், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி