திருநங்கையருக்கு ஜூன். 21ல் நலத்திட்ட உதவிகள் வழங்க முகாம்

79பார்த்தது
திருநங்கையருக்கு ஜூன். 21ல் நலத்திட்ட உதவிகள் வழங்க முகாம்
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில்,  
திருநங்கையருக்கு ஒரே இடத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து வரும் ஜூன். 21 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
     

இம்முகாமில், அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான பாரத் அட்டை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
   
மேலும், இதற்கான கூடுதல் விவரங்களை அறை எண். 303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி