இந்தியா’ கூட்டணி வெற்றி சேவா தளம் அமைப்பினர் கொண்டாட்டம்

77பார்த்தது
இந்தியா’ கூட்டணி வெற்றி சேவா தளம் அமைப்பினர் கொண்டாட்டம்
தமிழகம், புதுச்சேரியில் 'இந்தியா' கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை யொட்டி, தஞ்சாவூர் கீழவாசலில் காங்கிரஸ் சேவா தளம் அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக, கீழவாசல் காமராஜர் சிலைக்கு சேவா தளம் அமைப்பின் மாநகர மாவட்டத் தலைவர் திருஞானம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர், பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

வடக்கு மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ் சேவா தளம் மாநகர மாவட்டப் பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், வடக்கு மாவட்டத் தலைவர் ஏசுதாஸ், மாநகர மாவட்டத் தலைவி கோமதி சீனிவாசன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, திருவையாறு வட்டாரத் தலைவர் டி. ஆர். ராஜேந்திரன், மாநகரப் பொதுச் செயலர் தமிழ்ச் செல்வி, டிசிடியு சங்கர், மாநகர நிர்வாகிகள் பாஸ்கரன், போரஸ்,
நடராஜன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி