தஞ்சாவூர் இளம் பெண் ஆட்டோ மோதி பலி

60பார்த்தது
தஞ்சாவூர் இளம் பெண் ஆட்டோ மோதி பலி
கோவையில்
இருசக்கர வாகனம் மீது லோடு ஆட்டோ இளம்பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்செல்வம் மகள் கவிபாரதி (24) கோவை, ராமநாதபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும், கோவை, கணபதி கட்ட பொம்மன் வீதியைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் பார்த்திபனும் (26) நண்பர்கள்.
இந்நிலையில், பார்த்திபன் மற்றும் கவிபாரதி இருவரும் போத்தனூர் வழியாக இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த லோடு ஆட்டோ
கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கவிபாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்தகோவை மாநகர மேற்கு போக்குவரத்து குற்றப் புலனாய்வு போலீஸார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் சங்கரை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி